உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் வளத்துறை அலுவலகம் முற்றுகை

மீன் வளத்துறை அலுவலகம் முற்றுகை

காசிமேடு, 'ஒருவருக்கு ஒரு விசைப்படகு தான் இருக்க வேண்டும்; ஒரு விசைப்படகிற்கு மட்டுமே டீசல் மானியம் வழங்கப்படும்' என அரசு அறிவித்துள்ளது. இதை எதிர்த்து, சென்னை மீன்பிடி துறைமுக விசைப்படகு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் 100க்கும் மேற்பட்டோர், காசிமேடு மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.அவர்கள் கூறியதாவது:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் ஒருவருக்கு ஒரு விசைப்படகு தான் இருக்க வேண்டும் என்றும், ஒரு விசைப் படகுக்கு மட்டும் தான் டீசல் மானியம் வழங்கப்படும் என்ற திட்டம், எந்தவித முன்னறிவிப்பு இன்றி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.அதுமட்டுமல்லாமல், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டீசல் மானியத்தை, தடையின்றி உடனே வழங்க வேண்டும். இல்லையென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ