உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் ஓட்டுனரை தாக்கிய ஐவருக்கு வலை

போதையில் ஓட்டுனரை தாக்கிய ஐவருக்கு வலை

ஆர்.கே. நகர்:குடிபோதையில், கார் ஓட்டுனரை தாக்கிய ஐந்து பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் சரவணன், 42; கார் ஓட்டுனர். தண்டையார்பேட்டை, கருணாநிதி நகரில் தங்கி, வேலை பார்த்து வருகிறார்.நேற்று விடுமுறை என்பதால், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் குடிமையத்தில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு, ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த ஐந்து பேர், இவரிடம் வீண் வாக்குவாதம் செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் போதை கும்பல், சரவணனை பலமாக தாக்கி விட்டு தப்பியோடி விட்டது. படுகாயமடைந்த அவர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை