உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு வாங்கி தருவதாக மோசடி அரசு ஊழியருக்கு தொடர்பு

வீடு வாங்கி தருவதாக மோசடி அரசு ஊழியருக்கு தொடர்பு

அண்ணா நகர், அண்ணா நகர், எம்.ஜி.ஆர்., காலனி, காந்தி தெருவைச் சேர்ந்தவர் குப்பாத்தா, 44. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ராதிகா, 35, முருகேசன், 39, ஆகியோர் அறிமுகமாகினர்.இருவரும் குப்பாத்தாவிடம், தலைமை செயலகஊழியர் ஒருவரின் உதவியுடன், திருமங்கலத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.இதை நம்பிய குப்பாத்தா, பல தவணைகளில், 1.50 லட்சம் ரூபாய் அவர்களிடம் கொடுத்துள்ளார். அதேபோல், குப்பாத்தாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் பூங்கொடி, 37, என்பவரும், 8.30 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.ஆனால், அவர்கள் இதுவரை வீடு வாங்கி தராமல்,பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால், இருவரும் அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார், ராதிகா, முருகேசன் மற்றும் தலைமைச் செயலக ஊழியர் என, மூவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ