ஜெர்மனியில் வேலை தருவதாக ரூ.19 லட்சம் பெற்று மோசடி
அண்ணா நகர், நெற்குன்றம், சக்திநகர், 'சி' பிளாக்கை சேர்ந்தவர் கமலஹாசன், 46. இவர், வடபழநியில் உள்ள தனியார் ஹோட்டலில் பணியாற்றியபோது, அண்ணா நகர், 'ஐ' பிளாக்கை சேர்ந்த மரியா செல்வம் எனபவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது, ஜெர்மனியில் பல லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக மரியா செல்வம் கூறியுள்ளார். இதை நம்பிய கமலஹாசன், 19 லட்சம் ரூபாய் வரை, வங்கி பரிவர்த்தணை வாயிலாக, மரியா செல்வத்திடம் கொடுத்துள்ளார். பின், வேலையும் வாங்கி தாராமல், பணத்தையும் திருப்பி தராததால் ஏமாற்றம் அடைந்த கமலஹாசன், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் உண்மை தன்மை குறித்து, அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.