அரசு பள்ளி மாணவர்கள் இலவசமாக நீச்சல் கற்கலாம்
சென்னை:தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, முகப்பேரில் உள்ள டால்பின் நீச்சல் பயிற்சி அகடாமி சார்பில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச நீச்சல் பயிற்சி துவங்கி உள்ளது.இதுகுறித்து, அகாடமியின் இயக்குனர் முரளிதரன் கூறியதாவது:அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கும் மாணவ - மாணவியர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளில் பங்கேற்க செய்து, பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவோம். அரசு பள்ளியில் வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் நடத்தப்படுகிறது.பயிற்சியில் சேர விரும்பும் அரசு பள்ளி மாணவர்கள், முகப்பேரில் உள்ள டால்பின் அகாடமி அல்லது 94449 06878 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கூறினார்.