உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விஷம் குடித்து காவலாளி தற்கொலை

விஷம் குடித்து காவலாளி தற்கொலை

படப்பை,:குன்றத்துார் அருகே, படப்பை அடுத்த ஆதனுார் ஊராட்சியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 54. தனியார் நிறுவன காவலாளி. மது போதைக்கு அடிமையான இவர், ஆறு மாதங்களுக்கு முன், மதுவில் விஷம் கலந்து குடித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும், அதேபோல் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக கூறி மயங்கியுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு, கூடுவாஞ்சேரி அருகே பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரமேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி