ஐந்து ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டிற்கு வந்த ஜிம்
சென்னை:பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 103வது பிளாக் அருகில், 2020ம் ஆண்டு, 800 சதுர அடி பரப்பில் உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது.ஆனால், உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்படாததால், ஐந்து ஆண்டுகளாக பூட்டி கிடந்தது. சமீபத்தில், அங்குள்ள இளைஞர்கள் இந்த உடற்பயிற்சி கூடத்தை நடத்த முன்வந்ததால், 'ஸ்போர்ட்ஸ் கிளப்' வசம் ஒப்படைக்கப்பட்டது.இதையடுத்து, சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் செலவில், உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டன.இதை, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.