பொது நாணயக் கண்காட்சிசென்னை நாணயவியல் சங்கம் சார்பில் நாணய, ஸ்டாம்ப், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் விற்பனைக் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை. இடம்: ஏ.கே.ஆர்.மஹால், காளியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம். பொருட்கள் கண்காட்சிபூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை. இயற்கை உழவர் சந்தைஇயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருட்களுக்கான இயற்கை ஊழவர் சந்தை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: சி.எஸ்.ஐ., பெயின் பள்ளி, கீழ்ப்பாக்கம். இலவச கண் சிகிச்சை முகாம்காலை 8:00 மணி முதல் காலை 9:00 மணி வரை, இடம்: பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை, 11, சாஸ்திரி முதல் குறுக்கு தெரு, காவேரி நகர், அரங்கநாதன் சுரங்க பாதை, வசந்த் அண்டு கோ அருகே, சைதாப்பேட்டை. இலக்கிய விழாஇலக்கிய வட்டம் நடத்தும், டி.ஆர்.மகாலிங்கம் நுாற்றாண்டு விழா: பங்கேற்பு - சண்டமாருதம், மருதபரணி, பாரதராஜா, ரூஸ்வெல்ட், பெ.கி.பிரபாகரன், காலை 10:30 மணி. இடம்: வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் சாலை, அசோக் நகர். இசை விழாதெய்வீக இயல் இசை மன்றத்தின், 33ம் ஆண்டு இயல் இசை விழா, சத்குரு தியாகப் பிரம்ம ஆராதனை, காலை 8:30 மணி. பஞ்ச ரத்ன கீர்த்தனைகள், மதியம் 12:00 மணி. இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், வண்டிக்காரன் சாலை, கிண்டி. நாடக விழாமெட்ராஸ் சவுத் லயன்ஸ் அறக்கட்டளை சார்பாக, 12ம் ஆண்டு நாடக விழா, மாலை 6:30 மணி, இடம்: பாபலால் பவன், 15, 1வது சீவார்டு ரோடு, வால்மீகி நகர், திருவான்மியூர். சொற்பொழிவுதமிழ்வேத பாராயண பக்தஜன சபையின், 114ம் ஆண்டு திருநெறியத் தமிழ்வேத திருமுறை திருவிழா, 'அருளாளர்களின் அருள்வாக்கும் வாழ்வும்' சொற்பொழிவு, காலை 9:30 மணி, திருமுறை, திருப்புகழ் இன்னிசை, 11:30 மணி. இடம்: கந்தப்பெருமானார் கோவில், சண்முகஞானபுரம், குயப்பேட்டை.ஆன்மிகம் ஆடி அமாவாசை பூஜைராகு கால வழிபாடு, பாதகமலம் வழங்குதல் மதியம் 2:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஜெய் பிரத்யங்கிரா பீடம், சிங்கபெருமாள் கோவில், வெண்பாக்கம், வெங்கடாபுரம். ஆடி பிரம்மோற்சவம் 42ம் ஆண்டு விழா, காமதேனு வாகனம், மாலை 6:00 மணி. இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை. ஸ்ரீ பாலசுப்ரமண்ய ஸ்வாமி ஸத் சங்கம் சார்பில் பரதநாட்டியம், மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை. உழவாரப்பணிஆடலரசன் தலைமையில் திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் சிவப்பணி. காலை 8:00 மணி முதல். இடம்: தட்சிணாமூர்த்தி சுவாமிகள் கோவில், ரயில் நிலையம் அருகில், வண்ணாரப்பேட்டை. நாகராஜன் தலைமையிலான நந்தீஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின் 128வது பணி. காலை 9:00 மணி. இடம்: வடிவுடையம்மன் கோவில், திருவொற்றியூர். உபன்யாசம்ஏக்நாத் கிருபா சத்சங்கம் சார்பில் நடராஜன் ஷியாம் சுந்தரின் கம்பன் கண்ட ஹனுமன் எனும் தலைப்பில் ராமாயண உபன்யாசம், மாலை 6:00 மணி முதல் இரவு 8:15 மணி வரை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம், காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: குருவாயூரப்பன் கோவில், நங்கநல்லுார். கோவில் விழாபார்த்தசாரதி பெருமாள் கோவில்: ஆண்டாள் சின்ன மாடவீதி புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.கபாலீஸ்வரர் கோவில்: ஆடி அமாவாசை முன்னிட்டு சோமஸ்கந்தர் அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். கல்யாணபசுபதீஸ்வரர் கோவில்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேக பூஜை, காலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.