உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூசாரி உறவினர் மிரட்டல் தொகுப்பாளினி புகார்

பூசாரி உறவினர் மிரட்டல் தொகுப்பாளினி புகார்

சென்னை, கோவையைச் சேர்ந்த 30 வயது பெண், சென்னை சாலிகிராமத்தில் தங்கி, 'டிவி சேனல்' ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,'பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில் பூசாரி கார்த்திக், 45, என்பவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்' என, புகார் அளித்தார்.விருகம்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இந்நிலையில் அப்பெண், விருகம்பாக்கம் சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில், நேற்று ஒரு புகார் அளித்துள்ளார்.அதில், 'பூசாரி கார்த்திக்கின் உறவினர் அருணாச்சலம் என்பவர், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். செய்வினை வைத்து விடுவதாகவும் மிரட்டுகிறார்' எனக் கூறியுள்ளார். போலீசார், புகார் மனு ஏற்பு ரசீது வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை