உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே நாளில் 871 பூங்காக்கள் சீரமைப்பு மழைக்கு முன் பணியை முடிக்க உத்தரவு

ஒரே நாளில் 871 பூங்காக்கள் சீரமைப்பு மழைக்கு முன் பணியை முடிக்க உத்தரவு

சென்னை, சென்னை மாநகராட்சியில் உள்ள, 871 பூங்காக்களில் நேற்று, தீவிர துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. கோடம்பாக்கம் சிவன் பூங்காவில் நடந்த துாய்மை பணியை மேயர் பிரியா, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.இதுகுறித்து மேயர் பிரியா கூறியதாவது:சென்னை மாநகராட்சி சார்பில், 165 பூங்காக்கள், தத்தெடுப்பு முறையில் 88; செயல்பாடு, பராமரிப்பிற்காக ஒப்பந்தங்கள் அடிப்படையில் 616; மெட்ரோ ரயில் நிறுவனம் 2 பூங்காக்கள் என, 871 பூங்காக்கள் பராமரிக்கப்படுகின்றன.இந்த பூங்காக்களில் காலை 6:00 முதல் நண்பகல் 12:00 மணி வரை, தீவிர துாய்மை பணி நடைபெறுகிறது.துாய்மை பணியின் போது இருக்கைகள், சேதமடைந்த நடைபாதை, சுற்றுச்சுவர், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, கழிப்பறை உள்ளிட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.கடந்த இரண்டு மாதங்களாக, பேருந்து சாலைகள் முழுதும் துாய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மழைக்காலத்திற்கு முன் சாலைகள், பூங்காக்கள், கால்வாய்களில் உள்ள குப்பை அகற்றப்படும். மழைக்காலத்தில் பல்வேறு பணிகளுக்காக வார்டுக்கு, 10 பேர் பணியமர்த்தப்படுவர்.தனியார் நிறுவனங்களில் உள்ள, திறந்தவெளி நிலங்களில் அமைக்கப்பட்ட பூங்காக்களை, மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் அடைத்து வைக்கக் கூடாது. இதுபோன்று அனுமதி அளிக்காத பூங்காக்கள், பூட்டப்பட்ட பூங்காக்கள் இருந்தால், புகார் அளிக்கலாம்.மெட்ரோ ரயில் பணியால் சேதமடைந்த மழைநீர் வடிகால், இம்மாத இறுதிக்குள் சீரமைக்கப்படும். கண்ணப்பர் திடல் மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை மாநகராட்சி செலுத்துகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி