உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சி.ஐ.எஸ்.சி.இ., மண்டல தடகள போட்டி துவக்கம்

சி.ஐ.எஸ்.சி.இ., மண்டல தடகள போட்டி துவக்கம்

சென்னை,சி.ஐ.எஸ்.சி.இ., எனும், இந்திய பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் சார்பில், தமிழகம், புதுச்சேரி பகுதிகளுக்கான மண்டல தடகளப்போட்டி நேற்று துவங்கியது. குரோவ் பள்ளிகள் சார்பில், இப்போட்டிகள் சென்னை, நேரு ஸ்டேடியத்தில் நாளை வரை நடக்கின்றன. போட்டிகளை, சி.பி.ராமசாமி அய்யர் அறக்கட்டளையின் இயக்குனர் நந்திதா கிருஷ்ணா துவக்கி வைத்தார். குரோவ் பள்ளி தாளாளர் பிரசாந்த் கிருஷ்ணா போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில், 67 பள்ளிகளைச் சேர்ந்த, 1,300 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்ளில் வெற்றி பெறுவோர், எஸ்.ஜி.எப்.ஐ., போட்டிக்கு தகுதி பெறுவர். விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, நந்திதா கிருஷ்ணா பேசியதாவது: வாழ்க்கையில், புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதோர், சாதிக்க முடியாது. விளையாட்டில், 'ஸ்பீட், ஸ்ட்ரென்த், ஸ்கில், ஸ்பிரிட்' எனும், ஐந்து 'எஸ்'கள் முக்கியம். அதாவது, மனஉறுதி, விரைவு, வலிமை, தனித்திறமை, உத்வேகம் ஆகிய ஐந்து திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்