மேலும் செய்திகள்
செப்., முதல் இலங்கைக்கு கூடுதல் விமான சேவை
07-Aug-2024
சென்னை, சென்னை - சீரடி இரு மார்க்கத்திலும், தினசரி விமான சேவையை, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிறுவனம் இயக்கி வந்தது.கடந்த 2020ல் பரவிய கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட இந்த விமான சேவையை மீண்டும் துவக்க, இண்டிகோ நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இந்நிலையில், சென்னையில் இருந்து சீரடிக்கு, 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனம், தினமும் விமானம் இயக்கி வருகிறது. இருப்பினும், சில நேரங்களில் பயணியர் வருகை குறைவு போன்ற காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.ஆன்மிக சுற்றுலாவிற்கு பயணியர் பலரும் சீரடிக்கு செல்வதால், கூடுதல் விமானங்களை சென்னையில் இருந்து இயக்க, கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், சென்னை - சீரடிக்கு வரும் செப்., 21ம் தேதியில் இருந்து மீண்டும் தினசரி விமான சேவையை, இண்டிகோ நிறுவனம் துவங்க உள்ளது. சென்னையில் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:30 மணிக்கு சீரடிக்கு வந்தடையும். சீரடியில் இருந்து மாலை 5:00 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7:00 மணிக்கு சென்னை வந்தடையும் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராயல் புருனே ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ஆஸ்திரேலியா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு 2004ம் ஆண்டு வரை இந்தியாவிலும், 2004 வரை விமானங்களை ராயல் புருனே இயக்கி வந்தது. ஆனால் பல காரணங்களுக்காக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், சென்னை - புருனே - சென்னை இடையேயான நேரடி விமான சேவை, வரும் நவ., 5 முதல் துவங்குகிறது. வாரத்தில், செவ்வாய், வியாழன், சனிக்கிழமை என மூன்று நாட்கள் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களை தவிர்த்து, சென்னையில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இரவு 11:50 மணிக்கு புறப்படும் விமானம், இந்திய நேரப்படி புருனே விமான நிலையத்துக்கு காலை 5:25 மணிக்கு சென்றடையும். இதற்கான விமான கட்டணம் 26,500 ரூபாயில் இருந்து துவங்குகிறது.புருனேவில் இருந்து மாலை 5:30 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10:50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும். கட்டணம் 35,500 ரூபாயில் இருந்து துவங்குகிறது.
07-Aug-2024