உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை மெட்ரோவுக்கு சர்வதேச விருது

சென்னை மெட்ரோவுக்கு சர்வதேச விருது

சென்னை,சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பல்வேறு புதிய வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மெட்ரோ ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்கான வசதி மற்றும் சுரங்கப்பாதையில் காற்றோற்றமான வசதிக்கு, வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. குறைந்த இடம் மற்றும் குறைந்த செலவில், பாதுகாப்பான சுரங்கப்பாதை வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த சிறப்பான வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொண்டதால், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சர்வதேச விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனில், வரும் அக்., 28 முதல் 30ம் தேதி வரை நடக்கவுள்ள சர்வதேச மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ