மேலும் செய்திகள்
தெலுங்கானா மாணவர் செஸ்சில் முன்னிலை
27-Aug-2024
தெலுங்கானா மாணவர் செஸ்சில் முன்னிலை
27-Aug-2024
சென்னை, இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக, ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் தொடர், சென்னையில் நடந்து வருகிறது.இத்தொடரின் ஐந்தாம் கட்ட போட்டி, போரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று முன்தினம் துவங்கியது. சென்னையை சேர்ந்த, கிராண்ட் மாஸ்டர் கார்த்திகேயன் முரளி துவக்கி வைத்தார்.இப்போட்டியில், ஸ்லோவாக்கியாவைச் சேர்ந்த மானிக் மிகுலாஸ் மற்றும் துர்க்மெனிஸ்தானின் ஓராஸ்லி, மங்கோலியாவின் யூரிந்துயா உர்ட்சைக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் டேவிட் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இந்திய வீரர்களில் மஹாராஷ்டிரா ஜெய்வீர் மகேந்திரு, தமிழகத்தின் ஆதர்ஷ், தக் ஷின் அருண், ஹர்ஷத், தெலுங்கானா ஸ்ரீராம் ஆதர்ஷ் ஆகியோர் உள்ளனர். நேற்று நடந்த இரண்டாவது சுற்று முடிவில், தெலுங்கானாவின் ஸ்ரீராம் ஆதர்ஷ், மஹாராஷ்டிராவின் ஜெய்வீரரை வீழ்த்தி 2 புள்ளிகளில் முன்னிலைக்கு வந்தார். போட்டிகள் தொடர்ந்து, 28ம் தேதி வரை நடக்கின்றன.
27-Aug-2024
27-Aug-2024