ஜெயலலிதா பிறந்தநாள் போந்துாரில் விமரிசை
ஸ்ரீபெரும்புதுார், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், போந்துார் ஊராட்சியில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்ட கழக துணை செயலரும், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக் குழு உறுப்பினருமான போந்துார் செந்தில்ராஜன் தலைமை வகித்தார். அ.தி.மு.க., கொடியை ஏற்றிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். மேலும், 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய நிர்வாகிகள், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.