உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டட வடிவமைப்பாளர் வீட்டில் நகை திருடியோர் சிக்கினர்

கட்டட வடிவமைப்பாளர் வீட்டில் நகை திருடியோர் சிக்கினர்

மாம்பலம், தி.நகர் தெற்கு போக் சாலையை சேர்ந்தவர் மோகன்குமார், 33; கட்டட வடிவமைப்பாளர். இவர், கடந்த 2ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று, மதியம் வீடு திரும்பினார்.அப்போது, அவரது வீட்டின் பின் கதவை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன.இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, திருட்டில் ஈடுபட்ட தி.நகரை சேர்ந்த பிரகாஷ் சிங், 26, நேபாளம் நாட்டை சேர்ந்த பாசந்த் காதரி, 38, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிஷ்ணுசிங், 34, பெங்களூரைச் சேர்ந்த சுரேஷ் சாய், 30, ஆகிய நால்வரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து, 19 சவரன் நகை மற்றும்29 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், மோகன்குமாரின் தந்தை நடத்தும் ஐஸ் பேக்டரியில், பிரகாஷ் சிங் வேலை செய்வதும், மோகன்குமார் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, தனது உறவினர்களுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !