உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கருமாரியம்மன் கோவில் நகை 15 கிலோ வங்கியில் முதலீடு

கருமாரியம்மன் கோவில் நகை 15 கிலோ வங்கியில் முதலீடு

சென்னை, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையில் கிடைத்த 15,340 கிராம் தங்கம், கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்யப்படவுள்ளது.கோவில்களுக்கு 10 ஆண்டுகளாக காணிக்கையாக வந்த தங்க இனங்களில் உபயோகப்படுத்த இயலாதவற்றை மும்பையில் உள்ள அரசு தங்கம் உருக்கு ஆலையில் உருக்கி, சுத்த தங்கமாக மாற்றி, அந்தந்த கோவிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில், வங்கியில் முதலீடு செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில் கிடைத்த காணிக்கையில், 32,698 கிராம் தங்கம், கட்டிகளாக மாற்றி திருவேற்காடு கிளை பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. தற்போது, உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் துரைசாமிராஜு தலைமையில், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் மூர்த்தி, கோவில் அலுவலர்கள் முன்னிலையில் கோவிலில் தங்கம் பிரித்து எடுக்கும் பணி கடந்த, 4ம் தேதி முதல் இரண்டு நாட்கள் நடந்தது. அதன் வாயிலாக, 15,340 கிராம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் முதலீடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ