உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியுடன் ரகளை ரவுடிக்கு காப்பு

கத்தியுடன் ரகளை ரவுடிக்கு காப்பு

பெரம்பூர், வியாசர்பாடி, ஜோதி ராமலிங்கம் தெரு பகுதியில், நேற்று முன்தினம் ரவுடி ஒருவர் கத்தியுடன் ரகளை செய்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை மிரட்டியுள்ளார்.செம்பியம் போலீசாருக்கு புகார் சென்றது.சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், குடிபோதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த நபரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர், அப்துல் ரகுமான் என்ற சிட்டு,23, என்பதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.இதையடுத்து, அப்துல் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி