வாலிபால் டி.ஜி.வைஷ்ணவ் சாம்பியன் பைனலில் லயோலா ஒயிட்ஸ் தோல்வி
சென்னை, லயோலா கல்லுாரியின் நிறுவனர் 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 90வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.இதில், கல்லுாரிகளுக்கான வாலிபால் போட்டியில், 32 அணிகள் 'நாக் அவுட்' மற்றும் 'லீக்' முறையில் மோதின. இதில், லயோலா ஒயிட்ஸ், டி.ஜி. வைஷ்ணவ், பிஷப் ஹீபர் செகர்ட் ஹார்ட் கல்லுாரி அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் 'லீக்' ஆட்டத்தில், அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்ணவ் அணி, 22 - 25, 25 - 23, 25 - 18, 25 - 16 என்ற கணக்கில் செகர்ட் ஹார்ட் கல்லுாரியை வீழ்த்தியது.மற்றொரு 'லீக்' போட்டியில், டி.ஜி. வைஷ்ணவ் அணி, 25 - 18, 25 - 11, 25 - 13 என்ற கணக்கில், திருச்சி பிஷப் ஹீபர் அணியை தோற்கடித்தது.இறுதியாக நடந்த 'லீக்' ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடிய டி.ஜி. வைஷ்ணவ் அணி, 36 - 34, 25 - 22, 25 - 18 என்ற கணக்கில் லயோலா ஒயிட்ஸ் அணியை தோற்கடித்து, சாம்பியன் கோப்பையை வென்றது.