உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பை வெல்ல போகும் அணி எது?

லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பை வெல்ல போகும் அணி எது?

சென்னை, திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், லுாகாஸ் டி.வி.எஸ்., கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, திருவள்ளூரில் நடந்தது.இதில், பல்வேறு கிரிக்கெட் அகாடமி, கிளப் மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்று, லீக் மற்றும் நாக் அவுட் முறையில் மோதின.லுாகாஸ் டி.வி.எஸ்., - அப்பல்லோ டயர்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதி போட்டி, மழையால் 24 ஓவர்களாக நடத்தப்பட்டது. இதில், முதலில் பேட் செய்த, லுாகாஸ் டி.வி.எஸ்., அணி, 24 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு, 117 ரன்களை அடித்தது.அடுத்து பேட் செய்த அப்பல்லோ அணி, 18.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு, 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு அரையிறுதியில், வீல் இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய, சாம்சங் இந்தியா அணி, 25.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்யும் இழந்து, 90 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால், 37 ரன்களை வித்தியாசத்தில் வீல் இந்திய அணி வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப் போட்டி, 21ம் தேதி நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை