மேலும் செய்திகள்
பரிசோதனை முகாம்
30-Jul-2024
சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் டாக்டர் தணிகாசலம் அறக்கட்டளை சார்பில், 'இடையீட்டு இதய நல மருத்துவம் நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது.இதில் 'பார்டிஸ் எஸ்கார்ட்ஸ்' இதய மருத்துவ மைய தலைவர் டாக்டர் அசோக் சேத் சொற்பொழிவாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:இந்தியாவில் தயாராகும் சில இதய வால்வுகள், பன்னாட்டு வால்வுகளுக்கு இணையானது என, மேற்கத்திய நாடுகளில் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில நிலைகளில் இந்திய வால்வுகள், மற்றவைகளை விட சிறந்ததாக உள்ளன. இடையீட்டு இதய நல சிகிச்சையில், இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக முன்னேறி, டாவி எனும் 'அயோர்டிக் வால்வு' மாற்றம் இப்போது சிறப்பாக நடக்கிறது.இந்த சிகிச்சையின் விலைக் குறைத்து, எல்லாருக்கும் பரவலாக கிடைக்க செய்வது, நாட்டில் பெரும் சவாலாக உள்ளது. இதற்கு நாட்டிலேயே அதிகளவில் வால்வுகள் தயாரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இடையீட்டு இதய அறுவை சிகிச்சையில் சிறப்பாக பங்காற்றியதற்காக, டாக்டர் அசோக் சேத்க்கு, ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை துணைவேந்தர் டாக்டர் மகேஷ் வக்கமுடி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மைய இதய நல இயக்குனர் டாக்டர் தணிகாசலம், பேராசிரியர் மூர்த்தி, டாக்டர்கள் ரமேஷ், நாகேந்திர பூபதி மற்றும் மருத்துக் கல்லுாரி தலைவர் பாலாஜிசிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
30-Jul-2024