உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மத்திய சென்னை தேர்தல் அறிக்கை பா.ஜ., வேட்பாளர் வினோஜ் வெளியீடு

மத்திய சென்னை தேர்தல் அறிக்கை பா.ஜ., வேட்பாளர் வினோஜ் வெளியீடு

சென்னை, மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ், நேற்று காலை கூட்டணி கட்சியினருடன், மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்களை துாவி மரியாதை செய்தார். மாலையில், கமலாலயத்தில், மத்திய சென்னைக்கான வாக்குறுதிகள் உடைய தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.அதன் விபரம்:பா.ஜ., தலைமையகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.மத்திய சென்னையில் பா.ஜ., வெற்றி பெற்ற பின், சில குறிப்பிட்ட பிரச்னைகளை முன்வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.சிறந்த கல்விக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் ஆறு சட்டசபை தொகுதிகளிலும் நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். சட்டசபை தொகுதி தோறும் 30,000 பேருக்கு முத்ரா கடன் வழங்கப்படும். கூவம் ஆற்றை துாய்மைப்படுத்தி சீரமைக்கப்படும்.போதையில் சிக்கியுள்ள இளைஞர்களை மீட்க, அனைத்து தொகுதியிலும் போதை மறுவாழ்வு மையம் திறக்கப்படும்.இளைஞர்களுக்காக திறன் வளர்ச்சி மையங்கள், ஏழை குழந்தைகளுக்காக 'டாப்ஸ் ஒலிம்பிக்ஸ்' திட்டத்தில், மத்திய சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.இலவச ரேஷன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம், மத்திய சென்னைக்கு ஏற்படுத்தப்படும். 'மெட்ராஸ் புரோமனேட்டை' என்ற பெயரில் மெரினா கடற்கரையை துாய்மைப்படுத்த வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் இடமாக மாற்றப்படும்.எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை அமைக்கப்படும். மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் சமுதாய கூடங்கள் அமைக்கப்படும். அதேபோல் மெட்ரோ ரயில் பாதை பணிகளை விரைவுபடுத்தி முடிக்கப்படும்.சென்னை விமான நிலையத்தை, தென்னிந்தியாவின் நம்பர் ஒன் விமான நிலையமாக மாற்றி, வியாபாரம் வளர்ச்சியை ஏற்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை