உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளிகளை தாக்கியவர் கைது

தொழிலாளிகளை தாக்கியவர் கைது

துரைப்பாக்கம்: கட்டுமான தொழிலாளிகளை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர். பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் எத்திராஜ், 60. இவர், உறவினர் செல்வத்துடன் சேர்ந்து, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி செய்தார். இருதினங்களுக்குமுன், அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மன், 43, என்பவர், டைல்ஸ் அறுக்கும் மிஷின் சத்தம் தொந்தரவு ஏற்படுத்துவதாக கூறி உள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், எத்திராஜ், செல்வம் ஆகியோரை, நரசிம்மன் கையால் தாக்கினார். பின், மிஷினை எடுத்து தாக்கியதில், இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். துரைப்பாக்கம் போலீசார், நேற்று, நரசிம்மனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை