மேலும் செய்திகள்
21 கிலோ கஞ்சா பறிமுதல் வடமாநில வாலிபர் கைது
06-Mar-2025
தாம்பரம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, நேற்று காலை, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், தீவிர சோதனை நடத்தி, அவ்வழியாக சென்ற நபரை மடக்கி விசாரித்தனர்.அதில், அந்த நபர், திரிபுரா மாநிலம், செப்பாகிஜலா மாவட்டத்தை சேர்ந்த ஜிபன் சந்தரா டெப்நாட், 29, என்பதும், கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது.இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அசாம் மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.
06-Mar-2025