உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 17 ஆண்டு தலைமறைவு நபர் சிக்கினார்

17 ஆண்டு தலைமறைவு நபர் சிக்கினார்

சென்னை, சென்னையில், 'லீடர் கேப்பிட்டல் சர்வீஸ்' என்ற நிறுவனத்தில், ஜெய் கணேஷ் என்பவர் முதலீடு செய்தார். பின், முதலீடு செய்த பணம் நஷ்டம் ஏற்பட்டதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முகமது சீர் தெரிவித்து உள்ளார். இதனால் கோபமடைந்த ஜெய்கணேஷ், 2003ல் பலருடன் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, மிரட்டி, ஏழு காசோலைகளில் 41.80 லட்சம் ரூபாயை நிரப்பி, கையெழுத்து வாங்கி உள்ளனர்.இதுதொடர்பான புகாரில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்; தலைமறைவாக இருந்த இருவர் உயிரிழந்தனர். மற்றொரு குற்றவாளியான ஜனார்த்தனன், 70, என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தற்போது கைது செய்து உள்ளனர். கடந்த 17 ஆண்டுகளுக்கு பின், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது செய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட போலீசாரை, கமிஷனர் அருண் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி