உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணலி பயோ காஸ் தயாரிப்பு கர்நாடக துணை முதல்வர் ஆய்வு

மணலி பயோ காஸ் தயாரிப்பு கர்நாடக துணை முதல்வர் ஆய்வு

மணலி:மணலி, பல்ஜிபாளையத்தில், சென்னை மாநகராட்சியின் உதவியுடன், பயோ காஸ் தயாரிக்கும் தனியார் நிறுவனம் செயல்படுகிறது.சென்னையின் பல்வேறு பகுதியிலிருந்து, தினமும் 180 டன் காய்கறி மற்றும் மாட்டு சாணம் அடங்கிய மட்கும் குப்பை, மாநகராட்சி வாகனம் வாயிலாக இங்கு கொண்டு வரப்படுகிறது.நவீன முறையில் சுத்திகரித்து தினமும் 5,000 கிலோ பயோ காஸ் தயாரிக்கப்படுகிறது. இங்கிருந்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள், பங்க் உள்ளிட்டவற்றுக்கு, வினியோகிக்கப்படுகிறது.திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்தி வரும் இந்நிறுவனத்தின், பயோ காஸ் உற்பத்தி முறையை அறிய, கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் தலைமையில், அம்மாநில நகர்புற வளர்ச்சித்துறை அதிகாரிகள், நேற்று வந்தனர்.காஸ் உற்பத்தி செய்யும் முறை, செலவு, வினியோகம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து, அவர்கள் ஆய்வு செய்தனர். அந்நிறுவன அதிகாரிகளிடம் அவற்றை கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி