உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாஞ்சோலை எஸ்டேட் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மாஞ்சோலை எஸ்டேட் வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் இருந்து தனியார் நிறுவனம் தொழிலாளர்களை வெளியேற்ற தடை கோரியும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு இன்று(ஜூலை 08) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஏற்கனவே தொழிலாளர்களுக்கு 25 சதவீத பணப்பலன் வழங்கப்பட்டுள்ளது. மீதி 75 சதவீத தொகையை தொழிலாளர் துறையிடம் நிறுவனம் டெபாசிட் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் மறுவாழ்விற்கு நிரந்தர தீர்வு குறித்து தமிழக அரசு ஜூலை 22ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி