உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி 10ல் துவக்கம்

கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி 10ல் துவக்கம்

சென்னை, மாடுகளின் வாய் மற்றும் கால்களை பாதிக்கும் கோமாரி நோயால், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது, சினை பிடிப்பு தடை, இறப்பு என, கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது.சென்னை மாவட்டத்தில், 30,100 கால்நடைகளுக்கு, தடுப்பூசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஐந்தாம் சுற்றாக, தடுப்பூசி செலுத்தும் பணி, வரும் 10ம் தேதி துவங்குகிறது. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது பசு, எழுதுகள் மற்றும் எருமைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை