உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரங்கு அம்மை தொற்று தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

குரங்கு அம்மை தொற்று தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி

சென்னை: ''குரங்கம்மை என்ற அடுத்த தொற்றுநோய் சவாலாக காத்திருக்கிறது'' என, ஷெனாய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி, ெஷனாய் நகரில் உள்ள அரசு பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, தேசிய குடற்புழு நீக்க நாளுக்கான விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டு, மாணவியருக்கு மாத்திரைகளை வழங்கினார்.பின், 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற, எட்டு கி.மீ., நடைபயணம் திட்டத்தின் விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார். மாநில அளவிலான பொருட்காட்சியில் முதலிடத்தை பிடித்த மருத்துவ துறையின் பரிசை, அமைச்சர் சுப்பிரமணியன், பொது சுகாதாரத்துறையின் இயக்குனர் செல்வநாயகத்திடம் ஒப்படைத்தார்.பின், அவர் பேசியதாவது :கடந்த 2010ல் துவங்கிய குடற்புழு மாத்திரை வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மட்டுமின்றி, 20 - 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது.இத்திட்டத்தில், 24.67 லட்சம் பெண்கள் உட்பட 2.69 கோடி பேர் பயனடைவர். இப்பணிக்காக மாநிலம் முழுதும், 1.30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொது சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு, கொரோனா போன்ற நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது, பொது சுகாதாரத்துறைக்கு 'குரங்கம்மை' என்ற நோய் சவாலாக காத்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பா, பாக்., ஆகிய நாடுகளில் 'குரங்கம்மை' வேகமாக பரவுகிறது. நம் நாட்டில் இதுவரை நோய் த்தொற்று இல்லை. தடுப்பு நவடிக்கையாக, சென்னை விமானநிலையத்திற்கு வரும் பயணியருக்கு நோய்த்தொற்று குறித்து பரிசோதிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை