மேலும் செய்திகள்
குடியிருப்புக்குள் வீசப்பட்ட ஆண் சிசு சடலம்
22-Aug-2024
போரூர், தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில், போரூர் சுங்கச்சாவடி நோக்கி வரும் பாதையில், கடந்த 27ம் தேதி நள்ளிரவு, 'ஹோண்டா யூனிகார்ன்' பைக் கைவிடப்பட்ட நிலையில் நின்றது.அதில், தனியார் கூரியர் நிறுவனத்தின் பை இருந்தது. தகவலின்படி, போரூர் போலீசார் பைக்கை மீட்டு விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று அதிகாலை, போரூர் ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், உயிரிழந்த நபர் அம்பத்துார் ஒரகடம், பெரியார் தெருவைச் சேர்ந்த பாண்டியன், 37, என தெரிந்தது.இவரை காணவில்லை என, இவரது மனைவி அம்பத்துார் காவல் நிலையத்தில், ஏற்கனவே புகார் அளித்துள்ளார். தொடர் விசாரணையில், பாண்டியனுக்கு 3 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்ததால், மன உளைச்சலில் இருந்துள்ளார்.இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா எனவும், போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Aug-2024