உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளத்தில் மேன்ஹோல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

பள்ளத்தில் மேன்ஹோல் தடுமாறும் வாகன ஓட்டிகள்

அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில் வில்லிவாக்கம், சிட்கோ நகர் உள்ளது. இங்குள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட தெருக்களில், ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர்.இப்பகுதிகளில் சில தெருக்களில், புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டன. அதனால், சாலையை விட கழிவுநீர் வடிகாலின் 'மேன்ஹோல்' தாழ்வாக அமைந்துள்ளது. குறிப்பாக, சிட்கோ நகர் இரண்டாவது பிரதான சாலையில், 46 மற்றும் 47வது தெருக்களில், மேன்ஹோல் பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ