நெசப்பாக்கம் மயானம் செப்., 11 வரை மூடல்
சென்னை, பராமரிப்பு பணி காரணமாக, நெசப்பாக்கம் மயான பூமி தற்காலிகமாக மூடப்படுகிறது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு நெசப்பாக்கம் மயானபூமியில், எரிவாயு தகனமேடையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், செப்., 11ம் தேதி வரை மயான பூமியில் எரிவாயு தகனமேடை இயங்காது.இந்நாட்களில் அருகில் உள்ள, ஏ.வி.எம்., மற்றும் அன்னை சத்யா நகர் மயான பூமிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.