உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அசோக் நகரில் சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு

அசோக் நகரில் சாலை, நடைபாதை ஆக்கிரமிப்பு

அசோக் நகர், அசோக் நகரில் நடைபாதை மற்றும் சாலையோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோடம்பாக்கம் மண்டலம் அசோக் நகரில், 11வது அவென்யூ சாலை உள்ளது. இச்சாலை, அசோக் நகர் 100 அடி சாலை, மேற்கு சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. இச்சாலையில் ஏராளமான வணிக வளாகங்கள், குடியிருப்புகள் மற்றும் அரசு நுாலகம் ஆகிய அமைந்துள்ளன. இச்சாலையோரம் மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து, அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நடைபாதையில் இருசக்கர வாகனங்களும், சாலையோரம் டிராவல்ஸ் வாகனங்கள், கார்கள், லோடு வேன்கள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சாலையோரம் பழம், இளநீர், அலங்கார பொருட்கள் என, பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் உள்ளன. இதனால், பாதசாரிகள் நடைபாதையில் நடந்து செல்ல வழியின்றி, சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, நடைபாதை மற்றும் சாலையோரத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்கள் மீது, போக்குவரத்து துறை போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ