உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சைதாப்பேட்டைஊராட்சி பணியாளர்கள் சங்கத்தின் 'ஓட்சா' கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் அமல்ராஜ் தலைமையில், சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன் நேற்று, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில், துாய்மை காவலர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊதியம், ஆண்டுக்கு இரண்டு முறை சீருடை, ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் 42,000 ஆப்பரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 26 கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி