உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பெருமாள்

சிம்ம வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பெருமாள்

சென்னை, திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், நரசிம்ம பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை சேஷ வாகனமும், இரவு சிம்ம வாகன புறப்பாடும் நடந்தது. உற்சவர் தெள்ளியசிங்கர் மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கருடசேவை உற்சவம் இன்று நடக்கிறது. இதை முன்னட்டு, இன்று காலை 5:30 மணிக்கு கோபுர வாசல் தரிசனமும், இரவு அம்ச வாகன புறப்பாடும் நடக்கிறது.பிரம்மோற்சவத்தின் நான்காம் நாள் சூரிய, சந்திர பிரபை புறப்பாடு நடக்கிறது. வரும் 21ம் தேதி காலை பல்லக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை யோக நரசிம்மன் திருக்கோல புறப்பாடும், இரவு அனுமந்த வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் பிரதான நாளான, 23ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை