உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவல் நிலையங்கள் மேம்பாடு நான்கு ஆண்டுகளாக முடக்கம்

காவல் நிலையங்கள் மேம்பாடு நான்கு ஆண்டுகளாக முடக்கம்

தி.நகர்,இட நெருக்கடியில் காவல் நிலையங்கள் செயல்படுவதால், புகார்தாரர்கள் மட்டுமின்றி, போலீஸ்காரர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.கே.கே., நகர் பி.டி., ராஜன் சாலையில், தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட கே.கே., நகர் காவல் நிலையம் உள்ளது.கடந்த 1990ம் ஆண்டு முதல், மின் வாரியத்திற்கு சொந்தமான கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வருகிறது. இந்த கட்டடம் மோசமான நிலையில் இருக்கிறது. தவிர, சாலையைவிட தாழ்வாக உள்ளதால், மழைக்காலத்தில் காவல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. போதிய இட வசதியின்றி காவலர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், காவல் நிலையம் வரும் புகார்தாரர்களும், அமர இடம் இன்றி வெளியே காத்திருக்கும் நிலை உள்ளது.அதேபோல், பாண்டிபஜார் காவல் நிலையமும், போதிய இட வசதி இல்லாத கட்டடத்தில் இயங்கி வருகிறது.

புகார் தருவோருக்கான வசதி

தி.நகர் துணை கமிஷனர் அலுவலகம் மற்றும் பாண்டிபஜார் காவல் நிலையம், 4.11 கோடி ரூபாயில் கட்டுவது என முடிவு செய்யப்பட்டு, 2021 செப்., 13ல் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.உரிய அனுமதி கிடைக்காமல், இத்திட்டம் முடங்கியே கிடப்பதால், புகார்தாரர்கள் மற்றும் போலீசார், இட நெருக்கடியான காவல் நிலையங்களில் பல்வேறு அவதிகளை சந்தித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ