போக்குவரத்திற்கு திடீர் தடை போலீசார் அடாவடி
சென்னை : பேசின்பாலத்தில் இருந்து மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்வதற்கு பேசின் சாலை, ராஜா முத்தையா சாலை பிரதானமாக உள்ளது.இந்த சாலையில் கண்ணப்பர் திடல் சந்திப்பில் நேற்று காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை போக்குவரத்து போலீசார், பேரிகார்டு தடுப்புகள் வைத்து, வாகனப் போக்குவரத்தை தடை செய்தனர்.நேரு விளையாட்டு அரங்கம், பெரிய மேடு வழியாக பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்ல வேண்டிய வாகனங்களை, சூளை நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிட்டனர். குறுகலான அந்த சாலையில், செல்ல முடியாமல், வாகனங்கள் அணிவகுத்து நின்றன.கண்ணப்பர் திடல் சந்திப்பை கடந்து செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. பலரும் அவதியடைந்தனர்.