உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடமாற்றம் கேட்டு போலீசார் காத்திருப்பு 

இடமாற்றம் கேட்டு போலீசார் காத்திருப்பு 

ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், இடமாற்றம் கோரி 100க்கும் மேற்பட்ட போலீசார் காத்திருக்கின்றனர். ஆவடி மாநகர போலீஸ் கமிஷனரகத்தின் கீழ் ஆவடி, செங்குன்றம், திருமுல்லைவாயில், சென்னை எல்லை பகுதிகளில் உள்ள எண்ணுார், சாத்தாங்காடு, மணலி மற்றும் மணலி புதுநகர் உள்ளிட்ட, 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு சட்டசபை தேர்தலால் பணியிட மாற்றம் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, தேர்தல் முடிந்து சில மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உடல்நல பாதிப்பு, குடும்ப சூழல் காரணமாக விருப்ப இடமாற்றத்திற்கு மனு அளித்து, 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடமாற்றம் செய்யப்படாததால், பலரும் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாமல் மன உளைச்சலில் உள்ளனர். எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் செந்தில்குமார், பணியிட மாற்ற மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி