32 வகை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
எண்ணுார்:நாடு முழுதும், செப்., 7ம்தேதி விநாயகர்சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. ஹிந்து முன்னணி சார்பில்,சென்னை முழுதும், 5,501 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன.அதற்காக, எர்ணாவூர் கிடங்கில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான, ராட்சத விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதன்படி, கமலம், சிம்மம், மயில், காளை, நாகம், ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை என, ஆகம விதிகளை பின்பற்றி, 32 வகையான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன.ரசாயனம் கலக்காத வர்ணம் பூசப்பட்டு, அரசு விதிமுறைகள் படி, 3 - 10 அடி உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டு உள்ளன.பண்ருட்டியில் இருந்து, பிரத்யேக சிலை வடிவமைப்பாளர்களால், இந்த விநாயகர் சிலைகள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.