உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பஸ் மோதி பூசாரி பலி

அரசு பஸ் மோதி பூசாரி பலி

சூணாம்பேடு,செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு அடுத்த தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், 62; காளியம்மன் கோவில் பூசாரி.நேற்று காலை, வழக்கம் போல கோவிலில் பூஜை செய்து, வீடு திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையோரம் நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு விரைவு பேருந்து, தாமோதரன் மீது மோதியது. பலத்த காயமடைந்த தாமோதரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சூணாம்பேடு போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்கு பதிந்த போலீசார், அரசு விரைவு பேருந்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை