ஆட்டோவில் கஞ்சா கடத்திய சகோதரர்களுக்கு காப்பு
ஆவடி, ஆவடி அருகே வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக, கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், ஆவடி அடுத்த மோரை, திருமலை சாலையில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்த போது, 'பிளாஸ்டிக்' பையில், 60,000 ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், கஞ்சா கடத்தி வந்தது பழைய குற்றவாளியான பாக்கம், தும்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வம், 26, அவரது தம்பி அய்யப்பன், 24, ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த சாரதி, 23, திருநின்றவூரைச் சேர்ந்த முரளி, 31, என தெரிந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.