உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராமேஸ்வரம் ரயில் பயணியர் எழும்பூரில் அலைக்கழிப்பு

ராமேஸ்வரம் ரயில் பயணியர் எழும்பூரில் அலைக்கழிப்பு

சென்னை, அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை மாற்றம் குறித்து, பயணியருக்கு தகவல் அளிக்காததால், எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணியர் அலைக்கழிக்கப்பட்டனர்.இந்த விரைவு ரயிலில் ராமேஸ்வரம் செல்ல, எழும்பூர் ரயில் நிலையத்தில், 200க்கும் மேற்பட்ட பயணியர் நேற்று காத்திருந்தனர். மதியம் 1:45 மணிக்குப் பிறகும், இந்த ரயில் குறித்து அறிவிப்பு இல்லாததால், பயணியர் குழப்பத்தில் இருந்தனர். பின், அங்குள்ள அலுவலரை கேட்ட போது, அந்த ரயில் சேவை மாற்றப்பட்டு, பெரம்பூர் வழியாக செல்லும் எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணியர், கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்க, தங்கள் உடைமைகளுடன் பதற்றத்துடன் பெரம்பூர் ரயில் நிலையம் சென்றனர். அதற்குள் அந்த விரைவு ரயில் புறப்பட்டுவிட்டது. பயணியர் சிலர், சென்னை - கோவை இன்டர்சிட்டி விரைவு ரயிலில் ஏறி காட்பாடிக்குச் சென்று, பின், ராமேஸ்வரம் ரயிலை பிடித்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'விரைவு ரயில்களின் சேவை மாற்றம் குறித்து, பயணியருக்கு உரிய தகவல் அளிக்கப்பட்டது.பயணியரின் இந்த புகார் குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை