உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 2,030 சதுர அடியில் பி.ஐ.எஸ்., முத்திரை ஸ்ரீபெரும்புதுாரில் வரைந்து சாதனை

2,030 சதுர அடியில் பி.ஐ.எஸ்., முத்திரை ஸ்ரீபெரும்புதுாரில் வரைந்து சாதனை

ஸ்ரீபெரும்புதுார், இந்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய அமைவனம் செயல்படுகிறது.உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, உலகின் மிகப்பெரிய பி.ஐ.எஸ்., முத்திரை வரையும் சாதனை நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்து.உணவு நுகர்வோர் மற்றும் பொது வினியோகம் தொடர்பான பார்லிமென்ட் நிலைக்குழு தலைவர் தி.மு.க., - எம்.பி., கனிமொழி பங்கேற்று, பி.ஐ.எஸ்., முத்திரை சாதனை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.கல்லுாரி மாணவர்கள் மற்றும் இந்திய தர நிர்ணய அமைவன அலுவலர்கள் இணைந்து, 2,030 சதுர அடியில் உலகின் மிக பெரிய பி.ஐ.எஸ்., முத்திரையை வரைந்து சாதனை படைத்தனர்.மொத்தம் 2,36,000 முத்திரைகளை பதித்து உருவான இந்த படைப்பு, யுனிகோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை