உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி அணிகள் மின்னொளி கூடைப்பந்தில் சாம்பியன்

ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி அணிகள் மின்னொளி கூடைப்பந்தில் சாம்பியன்

சென்னை:மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில், மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள், எழும்பூரில் நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தன.பகல், இரவு ஆட்டமாக நடந்த மின்னொளி போட்டியில், லயோலா, இந்தியன் வங்கி, வருமான வரித்துறை, எஸ்.டி.ஏ.டி., உட்பட ஆண்களில் 38 அணிகளும், பெண்களில் 16 அணிகளும் பங்கேற்றன.நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் எக்சலன்ஸ் அணிகள் மோதின.விறுவிறுப்பான போட்டியில், துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் புள்ளிகளை குவித்தன. முடிவில், 89 - 71 என்ற கணக்கில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.மூன்றாம் இடத்திற்கான போட்டியில், லயோலா அணி, 74 - 47 என்ற கணக்கில், திண்டுக்கல் பி.சி., அணியை தோற்கடித்து, இடத்தை தக்க வைத்தது.

மகளிரில்...

மகளிருக்கான ஆட்டத்தில், ரைசிங் ஸ்டார் கிளப் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் எக்சலன்ஸ் அணிகள் மோதின. இதில், 75 - 46 என்ற புள்ளிக்கணக்கில் ரைசிங் ஸ்டார் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.இதே பிரிவில், ஜேப்பியார் மற்றும் எத்திராஜ் அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு, விளையாட்டு மேம்பாட்டு கமிஷனின் கூடுதல் செயலர் அதுல்ய மிஸ்ரா பரிசுகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்