உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழுக்களுடன் குடிநீர் சப்ளை புழுதிவாக்கத்தில் அதிர்ச்சி

புழுக்களுடன் குடிநீர் சப்ளை புழுதிவாக்கத்தில் அதிர்ச்சி

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, ராமலிங்கா நகர் பிரதான சாலையை ஒட்டிய, 20க்கும் மேற்பட்ட தெருக்களில், கடந்த நான்கு நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை.நேற்று காலை, மீண்டும் குடிநீர் சப்ளை துவங்கியது. பகுதிவாசிகள் குடம், வாளி உள்ளிட்டவற்றில் குடிநீரை சேமித்த போது, அதில் புழுக்கள் நெளிந்துள்ளன. அதிர்ச்சியடைந்த அவர்கள், சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், குடிநீர் சப்ளை உடனே நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:புழுதிவாக்கம் நகராட்சியாக இருந்த போது, கடந்த 2009ல் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணிகள் துவக்கப்பட்டன.தற்போது, இங்கு வீடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்டவை, தற்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்றது போல் இல்லை.பழைய குழாய்களின் நீர் செலுத்தும் திறன், இப்போதைய தேவைக்கு ஏற்றாற்போல் இல்லை. இதனால், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து, அதன் வழியாக தெருக்களில் நீர் தேங்குகிறது.நேற்று முன்தினம், ராமலிங்கா நகர் பிரதான சாலையில், 27 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய் உடைந்தது. இதில் இருந்து வெளியேறிய கழிவுநீர், குடிநீர் குழாய்களின் விரிசல் வழியே உட்புகுந்தது. இதுவே, குடிநீருடன் புழுக்களும் வரக் காரணம்.இந்த பிரச்னை இரு ஆண்டுகளாக நீடிக்கிறது. புழுதிவாக்கத்தில், பழைய பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்களை அகற்றி, எதிர்கால மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய குழாய்களை பொருத்தினால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி