சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், 50,000 சதுர அடி பரப்பு இடம், பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.இந்த இடம், 2018ம் ஆண்டு மின் வாரியத்திற்கு மாற்றப்பட்டது. இதற்கு பதிலாக, பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. இதில், விளையாட்டு மைதானம் அமைக்க, 1.45 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கியது.இதில், ஸ்கேட்டிங், இறகு பந்து, கூடை பந்து, கழிப்பறை, நடைபயிற்சி பாதை உள்ளிட்ட வசதிகளுடன் விளையாட்டு மையம் அமைக்கப்படுகிறது. தற்போது, 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஜூலை மாதம், மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட உள்ளது.குடியிருப்பு சாலை மற்றும் 36வது சாலை என இரண்டு இடத்தில், பூங்கா அமைக்க, வீட்டுவசதி வாரியம் 1.55 கோடி ரூபாய் ஒதுக்கியது. நடைபயிற்சி பாதை, உடற்பயிற்சி கூடம், யோகா மேடை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் இவை அமைகின்றன.இரண்டு பூங்காக்கள் அமைக்கும் பணியை, ஆறு மாதங்களில் முடிக்கும் வகையில், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.