உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள்

சென்னை, வேளாங்கண்ணி மாதா சர்ச் திருவிழா, வரும் 29ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும், வேளாங்கண்ணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு: திருச்சியில் இருந்து, வரும் 28ம் தேதி பகல் 12:00 மணிக்கு புறப்படும் ரயில், அதே நாளில் மாலை 4:20 மணிக்கு தாம்பரம் வரும் தாம்பரத்தில் இருந்து, 30ம் தேதி காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 4:10 மணிக்கு திருச்சி செல்லும் தாம்பரத்தில் இருந்து, 28ம் தேதி இரவு 7:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3:35 மணிக்கு வேளாங்கண்ணி செல்லும் வேளாங்கண்ணியில் இருந்து, 30ம் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8:20 மணிக்கு தாம்பரம் செல்லும். முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சென்ட்ரல் - ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.சென்னை சென்ட்ரல் - புவனேஸ்வர் இடையே, திங்கள் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், வரும் 26ம் தேதி முதல் செப்., 9ம் தேதி வரை, நீட்டித்து இயக்கப்படுகிறது. அதேபோல், புவனேஸ்வர் - சென்ட்ரல் இடையே, செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை, வரும் 27ம் தேதி முதல் செப்., 10ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை