உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநில பள்ளி ஹாக்கி லீக் ராமநாதபுரம் அணி சாம்பியன்

மாநில பள்ளி ஹாக்கி லீக் ராமநாதபுரம் அணி சாம்பியன்

சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கி லீக் போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் கடந்த மாதம் 28ல் துவங்கி, நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது.சென்னை, மதுரை உட்பட ஆறு பள்ளி அணிகள், ஆறு மண்டல இணைப்பு அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் மோதின.நேற்று முன்தினம் காலை நடந்த முதல் அரையிறுதியில், ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி அணி, 1 - 0 என்ற கணக்கில், பாளையங்கோட்டை அப்துல் ரகுமான் பள்ளியை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.மற்றொரு அரையிறுதியில், மதுரை மண்டல இணைப்பு அணி, 4 - 3 என்ற கணக்கில் திருச்சி கஜாமியன் பள்ளியை தோற்கடித்தது. மாலை நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், மதுரை மண்டல இணைப்பு அணி மற்றும் ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.அதில், 2 - 0 என்ற கோல் கணக்கில் ராமநாதபுரம் சையது அம்மாள் பள்ளி அணி வென்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.இரவு நடந்த பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற அணிக்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கோப்பையை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !