கல்லுாரி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி
சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா, 19. இவர், ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.நேற்று, கல்லுாரியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பாதியில் வெளியேறிய அவர், திடீரென மூன்றாவது தளத்தில் இருந்து கீழே குதித்தார்.இதில், இடுப்பு, முதுகு எலும்பு முறிந்து படுகாயமடைந்த அவர், மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேனாம்பேட்டை போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.ஆயிஷாவின் சகோதரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் விபத்தில் உயிரிழந்ததால், ஆயிஷா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.சமீபத்தில் சகோதரியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. சகோதரியின் இழப்பில் இருந்து மீண்டு வரமுடியாத ஆயிஷா, நேற்று 'என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதி வைத்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.