மேலும் செய்திகள்
வழிப்பறி திருடர்கள் மூவர் கைது
25-Feb-2025
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, வ.உ.சி.நகரை சேர்ந்தவர் சதீஷ், 37. ஆடுதொட்டியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் அஸ்வினி, 15. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தோழி லதா, மூன்று மாதங்களுக்கு முன் மன அழுத்த பாதிப்பால் இறந்து விட்டார். அதன்பின், 'லதா என்னை அழைக்கிறார்' என, அஸ்வினி, வீட்டில் இருந்தோரிடம் கூறி வந்துள்ளார். இதனால் சதீஷ், மகளை பல கோவில்களுக்கு அழைத்துச் சென்று வேண்டியுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், அஸ்வினி துப்பட்டாவால் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.***
25-Feb-2025